வடகொரியவே சைபர் தாக்குதலுக்கு காரணம் – ஆதாரம் இருப்பதாக அமெ… பகிரங்க குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் கணினிகளை பாதித்த வன்னாகிரை சைபர் தாக்குதலுக்கு வடகொரியா தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ரேன்சம் வேர் வன்னாகிரை வைரஸ் நிரல் தாக்குதலால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு வடகொரியா தான் பொறுப்பு என்று நேரடியாக குற்றம்சாட்டுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் போஸ்ஸர்ட் ((tom bossert)), இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறி உள்ளார்.
இதுபோன்ற செயல்களில் இருந்து வடகொரியாவை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com