சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புது படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா . தமிழ், தெலுங்கு,இந்தி , மலையாள என பல மொழி படங்களிலும் பணியாற்றிய இவர் தமிழில் விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளதுடன் இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார்.
இதனையடுத்து சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் எழுத உள்ளதாகவும், இந்த படத்தில் சில்வாவின் மகன்களான கெவின் மற்றும் ஸ்டீவன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்,படமானது ஜாக்கிசானின் ‘கராத்தே ஜிட்’ பாணியில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .
சமுத்திரக்கனி மற்றும் ஸ்டண்ட் சில்வா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் பூஜா கண்ணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியின் தங்கை என்பதும் ,இதுவே அவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் இவர் ஏற்கனவே காரா எனும் குறும்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…