பாகிஸ்தானில் சிந்து நதிக்கரையில் திருமண விழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 19 பெண்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில், ரஹீம் யார் கான் பகுதியில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ளது மச்கா எனும் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது.
இந்த திருமணத்திற்காக, ராஜன்பூரில் இருந்து, மச்காவுக்கு சிந்து நதிக்கரை வழியே, சுமார் 100 பேரை ஏற்றிக்கொண்டு ஓர் சிறிய ரக கப்பல் மூமல் வந்துள்ளனர்.
அப்போது, நீரின் வேகம் அதிகமான காரணத்தாலும், அதிகம் பேர் சிறிய கப்பலில் பயணித்த காரணத்தாலும், அது கவிழ்ந்துள்ளது. இதனால் அனைவரும் நீரில் இழுத்து செல்லப்பட்டனர்.
தகவலறிந்து வந்த மீட்புக்குழு இதுவரை 19 பேரின் உடல்களை மீட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பெண்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கோர சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளையும் முடிக்கிவிட சொல்லி இருக்கிறார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…