வாணி போஜனின் அடுத்த படத்தில் “சச்சின்” பட இயக்குனர்.!

வாணிபோஜன் நடிக்கும் கேசினோ என்ற அடுத்த படத்தில் சச்சின் பட இயக்குனரான ஜான் மகேந்திரன் நடிகராக அறிமுகமாகவுள்ளார் .
சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம் ஆகிய படங்களில் நடித்தவர் வாணி போஜன்.தற்போது விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும் மற்றும் பல படங்களில் கமிட்டாகியுள்ள வாணி போஜன் தற்போது மார்க் ஜோல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
“கேசினோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.இந்த படத்தில் வாணி போஜனுக்கு ஜோடியாக மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் நடித்து தயாரிக்கிறார்.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய ஸ்டான்லி சேவியர் இசையமைக்கும் இந்த படத்தில் “சச்சின்” பட இயக்குனரான ஜான் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகிறார் .மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
#casinothemovie கேசினோ, திரைப்படம் ஒரு இனிய தொடக்கம். நடிகனாக , நிச்சயம் எனக்கு பேர் சொல்லும் படமாக அமையும். நன்றி இயக்குனர் @markjoel_r @vanibhojanoffl @Madhampatty @teamaimpr pic.twitter.com/NTi8LWhW24
— John Mahendran (@johnroshan) November 26, 2020