உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற சச்சின்! எத்தனை முறை தெரியுமா?
உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா,பாகிஸ்தான் அணிகள் 6 முறை மோதியது. விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதியது.அப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் இந்திய அணியுடன் மோதிய 7 போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.நடந்த முடிந்த 7 உலககோப்பை போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மூன்று உலகக்கோப்பையில் மூன்று முறை ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
1992 Sachin
1996 Sidhu
1999 Prasad
2003 Sachin
2011 Sachin
2015 Kohli
2019 Rohit