சபரிமலைக்கு சிறப்பு பஸ் வசதி இல்லை..!ஐயப்ப பக்தர்கள் ஷாக்..!
- சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு வண்டிப்பெரியாறு-சத்திரம் இடையே சிறப்பு பேருந்து இயக்கப்படததால் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.
- சிறப்பு பஸ் இயக்க பக்தர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
கேரளா-இடிக்கி மாவட்ட புல்மேடு வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லலாம்.அந்த வழியில் செல்ல காலை 8.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதற்கு ஏற்றாற்ப்போல் சத்திரத்தில் பக்தர்கள் தங்கி செல்வது வழக்கமாகும்.அவர்களின் வசதிக்காக கடந்த சபரிமலை சீசன் வரை வண்டிப்பேரியாறு-சத்திரம் இடையே 13 கி.மீ.,க்கு கேரள அரசு சிறப்பு பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்கப்பட்டது.ஆனால் தற்போது சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட வில்லை
அதனால் சத்திரத்திற்கு அதிக கட்டணம் கொடுத்து ஜீப்,கார்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும்,தற்போது பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் சிறப்பு பேருந்துக்களை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.