3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!
இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டவுனில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களைக் குவித்தது. ஷிகர் தவான் 76 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 160 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா 40 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டும்னி அதிகபட்சமாக 51 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் சஹால், குல்தீப் இருவரும் அபாரமாக பந்துவீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.