நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரக்கனி போன்ற பலர் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது ” நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவிலே விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி இருந்தேன். அதை இரண்டு நாட்களில் வேற மாதிரி பேசிட்டாங்கள். ஏன் இப்படி மாறி மாறி பேசுறாங்கன்னு புரியவில்லை.
எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா..? எனக்கும் என் மகன் விஜய்க்கும் உள்ளது தந்தைக்கும் -மகனுக்குமான பிரச்சனை, குடும்பப் பிரச்சனை. அதில் என் தலையிடுகிறீர்கள்.. எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை.
குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இது நல்ல மேடை. நல்லதை செய்வோம். அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…