மீண்டும் இணைந்த மான்ஸ்டர் ஜோடி! காதலர் தினத்தை குறிவைத்துள்ள படக்குழு!

Default Image

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர், நடிகராகி தற்போது திறமையான நடிகராக இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பாவனிஷங்கர் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானிசங்கர் ஜோடி இணைந்துள்ளது. இந்த படத்தை ராதா மோகன் இயக்க உள்ளார். இவர் மொழி, அபியும் நானும், பிருந்தாவனம்,  காற்றின் மொழி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படம் சைக்லிஜிக்கல் திரில்லராக உருவாக உள்ளது. இப்படத்தை அடுத்த வருட காதலர் தினத்திற்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்