ரஷியாவிலன் எதிர்க்கட்சி தலைவர் ALEXEI NAVALNY திடீரென மருத்துவமனையில் அனுமதி.!
ரஷ்யா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (ALEXEI NAVALNY) திடீர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலெக்ஸி நவல்னி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு விமானத்தின் சென்று கொண்டிருந்த போது, திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதன் காரணமாக விமானத்தை அவசரமாக தரை இறக்கினர். நினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட, அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சைபீரியாவின் டாம்ஸ்க் நகரத்தில் இருந்து மாஸ்கோ திரும்பிய போது, அவர் குடித்த டீயில் விஷத் தன்மை கொண்ட எதோ ஒன்று கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.