உக்ரைன் ஆண்கள் மற்றும் சிறுவர்களை கற்பழிக்கும் ரஷ்ய படையினர் – ஐநா அதிகாரிகள் தகவல் !
உக்ரைன் நாட்டில் ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உக்ரைனிலுள்ள சிறுமிகளை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாக செய்திகள் வெளியாகி பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தினரால் அரங்கேறும் மேலும் கொடுமையான ஒரு விஷயம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைனிலுள்ள பெண்கள், சிறுமிகள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் பலாத்காரம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஐநா பிரதிநிதி பிரமிளா பட்டன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொழுது, உக்ரைனில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த வழக்குகள் தற்போது தனது கிடைத்துள்ளதாகவும், ஆனால் இன்னும் அது குறித்து விசாரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய உக்ரைன் வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனெடிக்டோவா அவர்கள், ரஷ்ய ராணுவ வீரர்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் அரங்கேறி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.