உக்ரைனின் முக்கியமான அணு உலையை விட்டு வெளியேறிய ரஷ்ய படைகள்..!
உக்ரைனின் முக்கியமான செர்னோபில் எனும் அணு உலையை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய முதல் நாளே ரஷ்யா, வடக்கு உக்ரைனிலுள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனையடுத்து, செர்னோபில் அணு உலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தேசியவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதனால் தான் அணு உலையை பாதுகாப்பதற்காக கைப்பற்றினோம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படைகள் வெளியேற தொடங்கி உள்ளதாக உக்ரைன் அரசு அமெரிக்க பாதுகாப்பு துறையிடம் தெரிவித்துள்ளது.