ஜூடோ சம்மேளன பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் புடின் இடைநீக்கம்..! – ஜூடோ ச்ம்மௌனம்

Default Image

சர்வதேச ஜூடோ சம்மேளனம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொடுத்திருந்த கௌரவத் தலைவர் பதவி மற்றும் ஜூடோ சம்மேளனத்தின் தூதர் ஆகிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்துள்ளது. 

உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.

ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு கண்டங்கள் வலுத்து வரும் நிலையில், சர்வதேச ஜூடோ சம்மேளனம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொடுத்திருந்த கௌரவத் தலைவர் பதவி மற்றும் ஜூடோ சம்மேளனத்தின் தூதர் ஆகிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்