இந்தியாவிடம் அரசியல் விளையாட்டு எடுபடாது – ரஷ்ய அதிபர்

Vladimir Putin

இந்தியாவும், பிரதமர் மோடியும்  தங்களின் தேச நலனை கருத்தில் கொண்டு சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றுகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ரஷ்ய மாணவர் தினத்தை’ முன்னிட்டு கலினின்கிராட் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசிய அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், உலகின் பொருளாதார வளர்ச்சியின் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதுவும், தற்போதைய பிரதமரின் தலைமையே அதற்கு காரணமாகும்.

பிரதமர் மோடியின் தலைமையின் போதுதான் இந்தியா இத்தகைய வேகமாக வளர்ச்சியை எட்டியுள்ளது. சர்வதேச அரங்கில் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என உறுதியளிக்கப்பட்டுள்ளதால், இந்தியா மற்றும் அதன் தலைமையை ரஷ்யா நம்பியிருக்க முடியும். அதாவது, இந்தியாவை நம்பகத்தன்மை கூட்டாளியாக கருதுகிறது. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இன்றைய உலகில் இது எளிதானது அல்ல.

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள்.. தொல்லியல் துறையின் முக்கிய தகவல்கள்….

ஆனால், 1.5 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு அதற்கான உரிமை உள்ளது. பிரதமரின் தலைமையில் அந்த உரிமை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அறிக்கை மட்டுமல்ல, கூட்டுப் பணியை ஒழுங்கமைப்பதில் இருந்து முக்கியமானது. மேற்குலக நாடுகளின் அரசியல் விளையாட்டு இந்தியாவிடம் எடுபடாது.  ஒரு நாட்டையும், அதன் தலைமையையும் நம்பி ஒத்துழைக்க முடியுமா அல்லது அதன் தேசிய நலனுக்கான அந்த நாடு சில முடிவுகளை எதிராக எடுக்குமா? போன்ற அரசியல் விளையாட்டுகள் இந்தியாவிடம் இருக்காது என்றார்.

இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியையும் பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி, நாட்டில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. மேலும், அங்கு பெரும் முதலீடுகளை செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வளர்ச்சியில் மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேக் இன் இந்தியா என்ற அவரது பிரச்சாரம் ரஷ்யா உட்பட பலராலும் கேட்கப்பட்டது.

மேலும், இந்த அனைத்து திட்டங்களையும் உயிர்ப்பிக்க இந்திய நண்பர்களுடன் இணைந்து முயற்சித்து வருகிறோம்.  இந்தியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு ரஷ்யாவிடமிருந்து சென்றுள்ளது. எங்கள் நிறுவனமான ரோசெனெப்ட் மூலம் முதலீடு செய்யப்பட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலைம், எரிவாயு நிலையங்களின் நெட்வொர்க்,  துறைமுகம் என பலவற்றில் முதலீடு செய்யப்பட்டது என கூறிய ரஷ்ய அதிபர், இந்தியாவின் பன்முக கலாச்சாரம் மற்றும் ரஷ்யாவில் இந்திய திரைப்படங்களின் பிரபலம் குறித்தும் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்