ரஷ்ய விமான ஒப்பந்த விவகாரம்.! தொழில்துறை அமைச்சரை பகிரங்கமாக திட்டிய அதிபர் புடின்.!
ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டு தொழில்துறை அமைச்சரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிரங்கமாக திட்டியுள்ளார்.
அண்மையில் ரஷ்யா அரசு தொலைகாட்சியில் நடைபெற்ற ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர் புடின், ரஷ்ய தொழில்துறை அமைச்சர் டெனிஸ் மாந்துரோவை திட்டிய வீடியோ வெகு வைரலாக பரவி வருகிறது.
அந்த நிகழ்வில், ரஷ்யாவின் விமான ஒப்பந்தங்களில் மிகவும் மெதுவாக வேலை செய்வதாக கூறி தொழில்துறை அமைச்சர் மந்துரோவை அதிபர் புடின் கடுமையாக விமர்சித்தார்.
அவர் விமர்சிக்கையில், ‘ நீங்கள் ஏமாறுவதை நிறுத்துங்கள்.’ எனவும், ‘ இந்த ஒப்பந்தங்கள் எப்போது தான் முடியும் எனவும் புடின் கடுமையாக விமர்சித்தார்.