நடிகர் அஜித்திற்கு நன்றியை வெளிப்படுத்திய கொலம்னா பகுதி மக்கள்.
தமிழ் சினிமாவின் முன்னை நடிகரான அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், விரைவில் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள கொலோம்னா நகரில் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது.
அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. மேலும் தல அஜித் இந்தியாவிற்கு திரும்பும் முன் 5000 கி.மீ பைக் ரைட் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ரஷ்யாவின் கொலம்னா பகுதியில் வலிமை படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் “AJITH IS THE BEST ” என அச்சடிக்கப்பட்ட டி-சர்டை வெளியிட்டு தங்களின் நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு…