உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,உக்ரைனில் கெர்சான்,பெர்டியான்ஸ்க், கெனிசெஸ்க், செர்னோபேவ்கா ஆகிய நான்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய படைகள் அறிவித்துள்ளது.
இதற்கிடையில்,குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா தாக்கியது மிருகத்தனமான செயல் என்றும், உக்ரைன் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா கூறியிருந்தது அப்பட்டமான பொய்.போர் தொடங்கியது முதல் தற்போது வரை ரஷ்ய படைகள் உக்ரைன் மக்களின் உள்கட்டமைப்புகளையும் மருத்துவமனைகளையும் தாக்கி வருகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில்,கப்பல் மற்றும் வான் வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நிலையில்,மறுபுறம் ஏவுகணை தாக்குதல் நடத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால்,பெரிய அளவில் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…