உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய தளபதி உயிரிழப்பு..!
ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த மற்றொரு மேஜர் ஜெனரலை கொன்றதாக உக்ரைன் கூறியுள்ளது. மேஜர் ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ போரில் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் நடைபெற்ற போரின்போது ரஷ்ய ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ கொல்லப்பட்டார். ஒரே வாரத்தில் உக்ரைன் படையின் பதிலடி தாக்குதலுக்கு பலியான 2-வது ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ ஆவார். ரஷ்ய இராணுவத்தின் 41-வது படை பிரிவின் தளபதியான ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ மூத்த அதிகாரிகளுடன் உயிரிழந்தார்.
முன்னதாக மார்ச் 3 அன்று, ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி உயிரிழந்தார் என உக்ரைன் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த போரில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இத்துடன் ரஷ்ய ராணுவத்தின் 290 டாங்கிகள், 999 கவச வாகனங்கள், 46 போர் விமானங்கள் மற்றும் 68 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚡️Ukraine kills Russian Major General Vitaly Gerasimov near Kharkiv, Ukraine’s Chief Directorate of Intelligence of the Defense Ministry said.
Gerasimov was a senior military official who participated in the second Chechen war and was awarded a medal for “capturing Crimea.”
— The Kyiv Independent (@KyivIndependent) March 7, 2022