ரஷ்ய ராணுவத்தின் வசமான செர்னோபில் அணுமின் நிலையம்..!

Published by
murugan

செர்னோபில் ஆலையை  ரஷ்ய ராணுவத்தின் வசம் இருப்பதாக நேற்று உக்ரைன் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் 2நாட்களாக தொடர்ந்து வான்வெளி மற்றும் தரை வழியாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்நிலையில்,  செர்னோபில் ஆலையை  ரஷ்ய ராணுவத்தின் வசம் இருப்பதாக நேற்று உக்ரைன் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யர்களின் முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதலுக்குப் பிறகு செர்னோபில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூற முடியாது என உக்ரைனின் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ போடோலிக் பாலிகோனிடம் கூறினார்.

செர்னோபில் மின் நிலையத்தை  கைப்பற்றிய ரஷ்யா

நேற்று ரஷ்ய படை செர்னோபில் மின் உற்பத்தி நிலையத்தைக் கைப்பற்றின. அதே நேரத்தில் உக்ரேனியப் படைகள் மூன்று பக்கங்களிலிருந்தும் நேற்று போரிட்டன. செர்னோபில் மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றிய சில மணி நேரத்திற்கு முன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டரில் “ரஷ்ய படைகள் செர்னோபில் பகுதியில் உள்ள அணு ஆலையை மீண்டும் கைப்பற்ற முயல்கின்றன. 1986-இல் நிகழ்ந்ததை போல ஒரு பேரழிவு நடக்காமல் இருக்க நமது வீரர்களை தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள் என தெரிவித்தார்.

கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி செர்னோபில் அணு உலையிலுள்ள குளிர் சாதன உறை வேலை செய்யவில்லை. இதனால் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு 4 அணுஉலை வெடித்தது. இந்த விபத்தில் முதலில் 30 பேர் உயிரிழந்தனர். பின்னர் படிப்படியாக 2000 பேர் வரை பலியாகினர். உலகிலயே மிக மோசமான அணு உலை விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சீறிய ஜிபி முத்து!!

மணிமேகலை vs பிரியங்கா : இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சீறிய ஜிபி முத்து!!

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…

1 hour ago

இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.!

சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

2 hours ago

WWT20 : ‘நாங்க சரியா விளையாடல’! தோல்வியை ஒத்துக்கொண்ட இந்திய மகளிர் அணி கேப்டன்!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…

2 hours ago

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

2 hours ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

2 hours ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

2 hours ago