ரஷ்ய ராணுவத்தின் வசமான செர்னோபில் அணுமின் நிலையம்..!
செர்னோபில் ஆலையை ரஷ்ய ராணுவத்தின் வசம் இருப்பதாக நேற்று உக்ரைன் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் 2நாட்களாக தொடர்ந்து வான்வெளி மற்றும் தரை வழியாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்நிலையில், செர்னோபில் ஆலையை ரஷ்ய ராணுவத்தின் வசம் இருப்பதாக நேற்று உக்ரைன் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யர்களின் முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதலுக்குப் பிறகு செர்னோபில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூற முடியாது என உக்ரைனின் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ போடோலிக் பாலிகோனிடம் கூறினார்.
செர்னோபில் மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யா
நேற்று ரஷ்ய படை செர்னோபில் மின் உற்பத்தி நிலையத்தைக் கைப்பற்றின. அதே நேரத்தில் உக்ரேனியப் படைகள் மூன்று பக்கங்களிலிருந்தும் நேற்று போரிட்டன. செர்னோபில் மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றிய சில மணி நேரத்திற்கு முன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டரில் “ரஷ்ய படைகள் செர்னோபில் பகுதியில் உள்ள அணு ஆலையை மீண்டும் கைப்பற்ற முயல்கின்றன. 1986-இல் நிகழ்ந்ததை போல ஒரு பேரழிவு நடக்காமல் இருக்க நமது வீரர்களை தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள் என தெரிவித்தார்.
கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி செர்னோபில் அணு உலையிலுள்ள குளிர் சாதன உறை வேலை செய்யவில்லை. இதனால் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு 4 அணுஉலை வெடித்தது. இந்த விபத்தில் முதலில் 30 பேர் உயிரிழந்தனர். பின்னர் படிப்படியாக 2000 பேர் வரை பலியாகினர். உலகிலயே மிக மோசமான அணு உலை விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.