குடிபோதையில் 10 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற ரஷ்ய படை..!

Default Image

கடந்த வாரம் குடிபோதையில் ரஷ்ய வீரர்கள் கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமியை சுட்டுக் கொன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீடுகளில் ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அப்போது ஒரு  குடும்பத்தின் வீட்டிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அதில் நாஸ்டியா என்று அழைக்கப்படும் 10 வயது சிறுமி கொல்லப்பட்டார் என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

அந்த சிறுமியின் உடலை கல்லறைக்கு செல்ல விடாமல் ரஷ்ய வீரர்கள் தடுத்ததை அடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அவரின் உடலை வீட்டின் அருகே புதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று சிறுமியின் உறவினர் ஒருவர் கூறினார். கிராமத்தில் உள்ள எல்லா கடைகளையும் ரஷ்ய படையினர் கொள்ளையடித்தார்கள்.

அவர்கள் கடைகளில் இருந்து நிறைய மதுவை வாங்கி குடித்துவிட்டு சுட ஆரம்பித்தனர்.  அப்போதுதான்  நாஸ்டியா சிறுமி அவரின்  மாமா முன் சுடப்பட்டதாக  கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin
annamalai
Arittapatti - Tungsten