முதல் முறையாக இந்தியர்களை வெளியேற்ற உதவிய ரஷ்ய ராணுவம்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் கடந்த 21 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.அதன்படி,கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர். அதே சமயம், இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால்,உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மேலும்,ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின்ன் உயர் அதிகாரி ஒருவர், மார்ச் 3 ஆம் தேதி கெர்சன் முழுப் பகுதியையும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறினார்.
முதல் முறையாக ரஷ்ய இராணுவம்:
இந்நிலையில்,ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட தெற்கு உக்ரைன் நகரமான கெர்மசன் நகரில் சிக்கி தவித்த மூன்று இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தின் உதவியுடன், பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் இரண்டு வியாபாரிகள் அடங்குவர்.முதல் முறையாக ரஷ்ய இராணுவம் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்ற உதவியுள்ள தருணம் இதுவாகும்.
மேலும்,மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த மூன்று இந்தியர்களை Simferopol (கிரிமியா) மற்றும் மாஸ்கோ வழியாக வெளியேற்றுவதற்கு உதவியுள்ளது.
இது குறித்து,மாஸ்கோவில் உள்ள தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்: “நாங்கள் Simferopol க்கு பஸ் ஏற்பாடு செய்திருந்தோம். பின்னர்,அங்கிருந்து அவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை தங்கள் விமானத்தில் பயணித்தனர்.அதில் சென்னை செல்லும் மாணவர் ஒருவர் மற்றும் அஹமதாபாத்தை சேர்ந்த வணிகர்கள் இருவரும் இருந்தனர்,என்று தெரிவித்தார்.
ஆபரேசன் கங்கா:
இதனிடையே,உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மத்திய அரசின் ஆபரேசன் கங்கா நடவடிக்கையின் கீழ் அண்டை நாடுகள் வழியாக தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில்,இதுவரை உக்ரைனில் உள்ள 22,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களில் 17,000 க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் உக்ரைனின் மேற்கு எல்லைகளில் இருந்து போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக் குடியரசு வழியாக இந்தியா திரும்பினர்.
நன்றி தெரிவித்த பிரதமர் மோடி:
ஆனால்,தற்போது 3 இந்தியர்கள் உக்ரைனின் கிழக்கு எல்லை மற்றும் ரஷ்யா வழியாக வெளியேறியுள்ளனர்.இப்பகுதி வழியாக இந்தியர்கள் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.இதனையடுத்து,இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக உழைத்த தன்னார்வக் குழுக்கள், நிறுவனங்கள், தனியார் நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
மீட்கும் நடவடிக்கை -திருப்தி:
மேலும்,உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளின் தலைவர்களுடனான தனது தனிப்பட்ட தொடர்புகளை நினைவு கூர்ந்தார் மற்றும் அனைத்து வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் பெற்ற ஆதரவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.மேலும்,ஆபரேசன் கங்கா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.
அப்போது உக்ரைன், போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள இந்திய சமூகம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததன் அனுபவங்களையும் மற்றும் இந்த நடவடிக்கையில் பங்களிப்பதில் உள்ள தங்கள் திருப்தியையும் வெளிப்படுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025