#BREAKING: ரஷ்யா -உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை..!
நாளை ரஷ்யா -உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது 6 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில் நடைபெற்றது. அப்போது ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நேரம் நடந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என ரஷ்யாவும், உக்ரைனும் அறிவித்தனர். நேற்று பேச்சுவார்த்தை நடந்தபோது ரஷ்ய படை தாக்குதலை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் தாக்குதலை அதிகரிக்கத் தொடங்கியது. இன்று கார்கிவ் நகரில் ரஷ்ய படை ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார். இந்நிலையில், நாளை ரஷ்யா -உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.