#BREAKING: ரஷ்யா -உக்ரைன் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் – தாலிபான்கள் அறிவுரை..!

Default Image

உக்ரைன் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். அமைதியான முறையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க கோருகிறோம் என தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரில் இதுவரை உக்ரைனைச் சேர்ந்த 137 பேர் ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்துள்ளனர். பல ரஷ்ய விமானங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், உக்ரைன் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.  வன்முறை சூழ்நிலைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தலிபான் கூறினார். ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நிலைமை குறித்து தலிபான்கள் கவலை தெரிவித்தனர்.

 உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலையார் கூறுகையில்,  800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். இதற்கிடையில், உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் அணுகுமுறை குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஏமாற்றம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்