ரஷ்யா, உக்ரைன் நாட்டு அதிபர்களை சந்தித்து பேசுகிறார் ஐ.நா. தலைவர்..!
ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது இரண்டு மாதங்களாக போர் தொடுத்து வருகின்ற நிலையில், இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உக்ரைன் நாட்டை விட்டு அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதோடு, போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார். அங்கு ரஷ்ய அதிபர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது உக்ரைன் பொருட்களின் மீதான போரை நிறுத்துமாறு ஐநா பொதுச் செயலாளர் அறிவுறுத்துவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அதேபோல் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோவை 28- ஆம் தேதி சந்தித்து பேசவுள்ளார்.