வாட்ஸ்அப்பிற்கு எதிராக நிர்வாக நடவடிக்கைகளை எடுத்த ரஷ்யா!!

Default Image

ரஷ்யாவில், ரஷ்ய பயனர்களின் தரவுகளை உள்ளூர்மயமாக்க தவறியதற்காக வாட்ஸ்அப்பிற்கு எதிராக ரஷ்ய நிர்வாக நடவடிக்கை.

ரஷ்ய பயனர்களின் தரவுகளை (localise data) உள்ளூர்மயமாக்க தவறியதற்காக ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் மீது ரஷ்யா நிர்வாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேஸ்புக்கிலிருந்து உடனடி கருத்து எதுவும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் WhatsApp ஆவணங்களுக்கு $ 13,700 முதல் $ 82,250 வரை அதாவது, 1 மில்லியன் முதல் 6 மில்லியன் ரூபிள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று  நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் தனிப்பட்ட தரவு சட்டத்தை மீறியதற்காக ரஷ்யா, கூகுளுக்கு $ 41,017 அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்டர்ஃபாக்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த வழக்கிற்கான நீதிமன்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.

ஒரு நாள் முன்னதாக, ரஷ்ய நீதிமன்றம் ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் கூகுளுக்கு 3 மில்லியன் ரூபிள் அபராதம் விதித்திருந்தது. தனிப்பட்ட தரவு சட்டத்தை மீறியதற்காகவும் மற்றும் அதே குற்றத்திற்காக பேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு எதிராக நிர்வாக நடவடிக்கைகளை பதிவு செய்தது. இந்த வழக்குகள் ரஷ்யா மற்றும் பிக் டெக் இடையே நடக்கும் ஒரு பரந்த சண்டையின் ஒரு பகுதியாகும் என்று கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்