36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது ரஷ்யாவின் சோயுஸ் -2.1 பி!
ரஷ்யா தனது சோயுஸ் -2.1 பி கேரியர் ராக்கெட்டைஅந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் 3.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒன்வெப் நிறுவனத்திலிருந்து 36 செயற்கைக்கோள்களை சுமந்துக்கொண்டு ரஷ்யாவை சேர்ந்த சோயுஸ் -2.1 பி விண்கலம், அந்நாட்டு நேரப்படி மதியம் 3.26 மணிக்கு வோஸ்டோக்னி காஸ்மோட்ரோமில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த வோஸ்டோக்னி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஒன்வெப் செயற்கைக்கோள்களின் முதல் ஏவுதலும், இந்த விண்வெளி மையத்திலிருந்து முதல் வணிக ரீதியான ஏவுதலும் இதுவே ஆகும்.
பைக்கோனூர் விண்வெளி மையத்திலிருந்து அடுத்த ஆண்டு (2021-ல்) மேலும் ஒரு விண்களத்தை ஏவவுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி 34 செயற்கைக்கோள்களும் ஏவப்படும் எனவும், மார்ச் 21 அன்று அந்த 34 செயற்கைக்கோள்களும் சுற்றுப்பாதையில் உயர்த்தப்படவுள்ளதாகவும், அந்நிறுவனம் மொத்தமாக சுமார் 600 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.