6 வருடங்களுக்கு பிறகு எகிப்து சுற்றுலாவிற்கு விமான பயணத்தை தொடங்கியதுள்ளது ரஷ்யா.
கடந்த 2015 ஆம் வருடம் அக்டோபர் மாதம் எகிப்தில் உள்ள தெற்கு சினாயில் ஷார்ம்-எல் ஷேய்க்கிலிருந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் செல்வதற்காக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 224 பேருடன் சென்ற அந்த விமானம் புறப்பட்ட 23 ஆவது நிமிடத்தில் அதன் கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்துள்ளது. மேலும் இந்த விமானம் சினாய் மலைப்பகுதியில் மோதி அதில் பயணித்த 224 பேரும் உயிரிழந்தனர்.
இதற்கு அந்நேரத்தில் ரஷ்ய அதிகாரிகள் எகிப்தில் உள்ள விமான நிலையங்களில் போதுமான அளவு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தது. இந்த சம்பவத்தை அடுத்து சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் திங்கள்கிழமை இன்று ரஷ்யா, சுற்றுலாவிற்கான விமான பயணத்தை எகிப்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை அதிகாலை ரஷ்யாவின் மாஸ்கோவ் நகரிலிருந்து 300 சுற்றுலா பயணிகளுடன் எகிப்து ஏர் எம்எஸ் 724 விமானம் புறப்பட்டுள்ளது.
சில மணி நேரம் கழித்து, ஏர்பஸ் ஏ 300-330 பிரபலமான செங்கடல் இடமான ஹுர்கடாவில் தரையிறங்கியது என்று எகிப்தின் தேசிய விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எகிப்து ஏர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சினாய் தீபகற்பத்தின் முனையில் ரஷ்ய தலைநகரிலிருந்து ஹுர்கடா மற்றும் ஷாம் எல்-ஷேக் ஆகிய இடங்களுக்கு ஏழு விமானங்களை இயக்கவுள்ளது. மாஸ்கோவிலிருந்து ஷர்ம் எல்-ஷேக்கிற்கு முதல் எகிப்து ஏர் விமானம் செவ்வாய்க்கிழமை செயல்பட இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…