உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் ஒருபுறம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், மறுபுறம் மனிதனிகளின் செல்லப்பிராணிகளும், விலங்குகளும் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து விலங்குகளுக்கான முதல் தடுப்பூசிபதிவு செய்யப்பட்டுள்ளது. ரோசல்கோனஜோர் என்ற அமைப்பு இன்று இது தொடர்பாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த புதிய தடுப்பூசியின் பெயர் கார்னிவாக்-கோவ்(Carnivac-Cov). இது ரஷ்யாவின் விலங்கு ஆரோக்கியத்திற்கான மத்திய மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆரம்ப சோதனையில் பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை எனவும், இந்த தடுப்பூசியின் அதிகளவிலான உற்பத்தி அடுத்த மாதத்தில் தொடங்கும் என ரோசல்கோனஜோர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கிரீஸ், ஆஸ்திரேலியா, போலந்து, கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதை வாங்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
கார்னிவாக்-கோவ்(Carnivac-Cov) தடுப்பூசியை நாய்கள், பூனைகள், எலிகள், நரிகள் மற்றும் பிற விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டது என்று ரோசல்கோனாஜூரின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது எனவும் இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இந்த தடுப்பூசி மூலம் விலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் 100 சதவீதம் எதிர்ப்பு உடல்களில் உருவாகும் என தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி தயாரிக்கின்றன என கூறப்படுகிறது. கொரோனாவால் மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். பல செல்லப்பிராணிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் முதல் தடுப்பூசியையும் ரஷ்யா தான் பதிவு செய்தது. ரஷ்யாவில் ஏற்கனவே மனிதர்களுக்கு மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உள்ளன. அவற்றில் நன்கு அறியப்பட்டவை ஸ்பூட்னிக் வி, மாஸ்கோவும் ஆகிய இரண்டிற்கும் அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற இரண்டு தடுப்பூசி எபிவாகொரோனா மற்றும் கோவிவாக் ஆகும். இந்த தடுப்பூசி குறித்து பல நாடுகள் அச்சத்தை தெரிவித்துள்ளன. இந்த தடுப்பூசி குறித்தும் பல கேள்விகள் எழுந்தன. ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…