உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை தயார்படுத்தும் ரஷ்யா- உக்ரைன் தகவல்
உக்ரைனின் கீவ் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாக உக்ரைன் தகவல்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 2 லட்சம் புதிய படை வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாகவும் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி எச்சரித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலுக்கு எத்தனை பீரங்கிகள், எவ்வளவு ஆயுதங்கள் தேவை என்று நாங்கள் அனைத்து கணக்கீடுகளையும் செய்துள்ளோம். தற்போதைய நிலை மற்றும் நம்மிடம் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் இவற்றை வைத்திருப்பது, இதனால் இனி நாம் எந்தவித இழப்பையும் சந்திக்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.
“The Russians are preparing some 200,000 fresh troops. I have no doubt they will have another go at Kyiv,” Valerii Zaluzhnyi, commander-in-chief of Ukraine’s Armed Forces, told the Economist.https://t.co/gDbkW7tuhx
— The Kyiv Independent (@KyivIndependent) December 15, 2022