ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய இந்தியாவுடன் கைகோர்க்க விருப்பம் உள்ளது. அதனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. – ஆர்.டி.எஃப் தலைவர் டிமிட்ரி.
ரஷ்யா அண்மையில், தன் நாட்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி எனும் கொரோனா தடுப்பூசியை அண்மையில் அறிமுகப்படுத்தியது. உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என அந்நாட்டு அதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்து வருகிறார்.
இந்த ஸ்பூட்னிக்-வி எனும் தடுப்பூசியை கமாலெயா நிறுவனம், ஆர்.டி.எஃப் உடன் இணைந்து உருவாக்கியது. இது தொடர்பாக ஆர்.டி.எஃப் தலைவர் டிமிட்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ‘ கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க லத்தீன், அமெரிக்கா, ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவை தீவிரம் காட்டி வருகின்றன.’
மேலும், ‘ ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை ரஷ்யாவை போல பல்வேறு நாடுகளில் சோதனை மேற்கொள்ள உள்ளோம். ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய இந்தியாவுடன் கைகோர்க்க விருப்பம் உள்ளது. அதனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் ரஷ்யா சர்வதேச நாடுகளின் உதவியை நாடுகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…