Sputnik V தடுப்பூசி தயாரிப்பை தொடங்கிய ரஷ்யா.!

Published by
murugan

கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ரஷ்யா நாட்டில் உள்ள காமலேயா எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மனிதர்களுக்கு பரிசோதனை செய்து நிறைவு செய்துவிட்டதாகவும், இந்த தடுப்பூசிகளை அக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

அந்த தடுப்பூசியை தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உலகின் முதல் தடுப்பூசி எனக் கூறும் “ஸ்பூட்னிக் வி” உற்பத்தியை ரஷ்யா தொடங்கிவிட்டதாகவும், இந்த மாத இறுதியில் சந்தைக்கு வரவுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை மாஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒன்றிணைப்புடன் இணைந்து உருவாக்கியுள்ளது. மனிதர்கள் மீது நடத்தப்படும் இறுதிகட்ட சோதனைக்கு முன்பாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசி. இதற்கு எதற்காக ஸ்பூட்னிக்-வி என பெயர் வைத்தார்கள் என கேள்வி எழுந்தது. அதன் காரணத்தை அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 1957இல் சோவியத் யூனியன் பிரிந்ததற்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு, விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் தான் ஸ்பூட்னிக்.

சோவியத் யூனியனால் விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் இதுவாகும் ஸ்பூட்னிக் என்றால் சக மனிதன் என்பது பொருள். ஆனால், அது நாளடைவில் ஸ்பூட்னிக் என்றால் செயற்கைகோள் எனும் அர்த்தம் கொள்ளும் ரஷ்யாவில் பிரபலமானது. அதனால் தான் கொரோனா தடுப்பூசிக்கும் இதே பெயரை அரசு வைத்துள்ளது என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

16 minutes ago

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைந்தார்!

ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…

25 minutes ago

“ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது” – சபாநாயகர் அப்பாவு!

 சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…

1 hour ago

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை! 6 பேர் கைது!

நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…

1 hour ago

பிபின் ராவத் மரணம்.. ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்! வெளியான நிலைக்குழு அறிக்கை!

டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…

2 hours ago

பழனிசாமி கத்திக் கூப்பாடு போட்டாலும் அதில் உண்மை இருக்காது..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…

2 hours ago