1961 ஆம் ஆண்டு நடைபெற்ற அணு ஆயுத சோதனை வீடியோவை வெளியிட்டுள்ள ரஷ்யா!
1961 ஆம் ஆண்டு நடைபெற்ற அணு ஆயுத சோதனை வீடியோவை வெளியிட்டுள்ளது ரஷ்யா.
ரஷ்யா இன்றுடன் அணு ஆராய்ச்சியின் 75ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனவே இதனை கொண்டாடும் வகையில் 1961 ஆம் ஆண்டு ரஷ்யா மேற்கொண்ட அணு ஆயுத பரிசோதனையின் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை காட்டிலும் 3 ஆயிரத்து 333 மடங்கு திறன் வாய்ந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வானில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகைமூட்டம் எழுப்பும் இந்த குண்டு வெடிப்பு காட்சி பார்ப்போரை அச்சுமுற செய்யும் வகையில் அமைந்துள்ளது.