கொரோனா பாதித்த பின்னரும் சிகிச்சை அளிக்க சொல்லி கட்டாயம்? 2 மருத்துவர்கள் தற்கொலையா.?

Published by
மணிகண்டன்

தென்மேற்கு ரஸ்யாவில், வோரோனேஜ்  பகுதியில் இயங்கும் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த அலெக்ஸ்சாண்டர் ஷூலேபோவ் என்கிற 37 வயது மருத்துவர் தான் வேலைபார்த்த  மருத்துவமனையில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்துள்ளார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ரஸ்யாவிலும் அதன் தாக்கம் தற்போது அதிகரித்து கொண்டிருக்கிறது. தற்போது வரையில், அந்நாட்டில் கொரோனாவால் பதித்தவர்கள்  எண்ணிக்கை 1,55,268ஆக உள்ளது. நேற்று மட்டுமே 10,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அந்நாட்டினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும், ரஸ்யாவில் கொரானாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,451-ஆக உள்ளது. இது கொரோனா அதிகம் பாதித்த மற்ற நாடுகளை ஓப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைவுதான் என கூறப்படுகிறது. நேற்று மட்டுமே கொரோனாவுக்கு 76 பேர் பலியாகியுள்ளனர். 

அந்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களின் செயல் அந்நாட்டினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தென்மேற்கு ரஸ்யாவில், வோரோனேஜ்  பகுதியில் இயங்கும் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த அலெக்ஸ்சாண்டர் ஷூலேபோவ் என்கிற 37 வயது மருத்துவர் தான் வேலைபார்த்த  மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். 

அதற்கு முன்னர், தனது சக மருத்துவருடன் காணொளியில் பேசியுள்ளாராம். அந்த காணொளியில் மருத்துவமனையில் சரியான உபகரணங்கள் கொடுக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், இங்கு எங்களுக்கும் (மருத்துவர்களுக்கு ) கொரோனா வந்துள்ளது. இருந்தும் எங்களை சிகிச்சை அளிக்க கோரி கட்டாயப்படுத்துகின்றனர். என குற்றம் சாட்டியுள்ளார். 

ஆனால், இந்த கருத்தில் உண்மை இல்லை என கூறி, அந்நாட்டு காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து சக மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். 

இதற்கு முன்னர் 2 பெண் மருத்துவர்கள் இதே போல மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்து உயிர்விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

“மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…

5 mins ago

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! முதலமைச்சர் உடனடி உத்தரவு.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…

12 mins ago

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திகுத்து : அன்புமணி கடும் கண்டனம்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…

21 mins ago

சென்னையில் பரபரப்பு., அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! இருவர் கைது.!

சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…

39 mins ago

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்.!

சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…

1 hour ago

வயநாடு தேர்தல் : தனது தங்கைக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி.!

வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…

1 hour ago