கொரோனா பாதித்த பின்னரும் சிகிச்சை அளிக்க சொல்லி கட்டாயம்? 2 மருத்துவர்கள் தற்கொலையா.?
தென்மேற்கு ரஸ்யாவில், வோரோனேஜ் பகுதியில் இயங்கும் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த அலெக்ஸ்சாண்டர் ஷூலேபோவ் என்கிற 37 வயது மருத்துவர் தான் வேலைபார்த்த மருத்துவமனையில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ரஸ்யாவிலும் அதன் தாக்கம் தற்போது அதிகரித்து கொண்டிருக்கிறது. தற்போது வரையில், அந்நாட்டில் கொரோனாவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 1,55,268ஆக உள்ளது. நேற்று மட்டுமே 10,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அந்நாட்டினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், ரஸ்யாவில் கொரானாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,451-ஆக உள்ளது. இது கொரோனா அதிகம் பாதித்த மற்ற நாடுகளை ஓப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைவுதான் என கூறப்படுகிறது. நேற்று மட்டுமே கொரோனாவுக்கு 76 பேர் பலியாகியுள்ளனர்.
அந்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களின் செயல் அந்நாட்டினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தென்மேற்கு ரஸ்யாவில், வோரோனேஜ் பகுதியில் இயங்கும் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த அலெக்ஸ்சாண்டர் ஷூலேபோவ் என்கிற 37 வயது மருத்துவர் தான் வேலைபார்த்த மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
அதற்கு முன்னர், தனது சக மருத்துவருடன் காணொளியில் பேசியுள்ளாராம். அந்த காணொளியில் மருத்துவமனையில் சரியான உபகரணங்கள் கொடுக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், இங்கு எங்களுக்கும் (மருத்துவர்களுக்கு ) கொரோனா வந்துள்ளது. இருந்தும் எங்களை சிகிச்சை அளிக்க கோரி கட்டாயப்படுத்துகின்றனர். என குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த கருத்தில் உண்மை இல்லை என கூறி, அந்நாட்டு காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து சக மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இதற்கு முன்னர் 2 பெண் மருத்துவர்கள் இதே போல மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்து உயிர்விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.