உலகிற்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா கொண்டு வருகிறதா?
ரஷ்ய நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது. விரைவில் முழு சோதனையும் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க அதற்கான தடுப்பு மருந்தை கண்டறிய பல்வேறு நாட்டு மருத்துவ குழு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், ரஷ்யா நாட்டின் ஆராய்ச்சி குழு தற்போது முதற்கட்டதை தாண்டி இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்து, உலகிற்கு முதலாக கொரோனா மருந்தை வெளியிடும் முனைப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், ரஷ்யா நாட்டில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனை கடந்த ஜூன் 18இல் முடிந்து இரண்டாம் கட்ட சோதனை தொடங்கிவிட்டது. விரைவில் மூன்றாம் கட்ட சோதனையும் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும்.’ என்கிறவாறு தெரிவித்துள்ளார்.