உக்ரைன் மீது ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது – உக்ரைன் அதிபர்!
ரஷ்யா மற்றும் உக்ரைனில் தொடர்ச்சியாக போர் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்ட தெற்கு உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் நாட்டின் மீது ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
எனவே, இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பேச்சுக்களைக் கூட தடுக்கும் வகையில் ரஷ்யா மீது வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு மேற்கு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.