கடவுளிடமிருந்து ரஷ்யா தப்ப முடியாது – உக்ரைன் அதிபர்
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொளி வாயிலாக பேசியுள்ளார். அப்போது தேவாலயம் தாக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, கடவுளிடமிருந்து ரஷ்யா தப்ப முடியாது. ரஷ்யாவின் தாக்குதலை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.