ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, ‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது.
இணையதளங்களை முடக்கும் ரஷ்யா:
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதில் இருந்து, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள தகவல்களின் மீதான தனது கட்டுப்பாட்டை கணிசமாக ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கூகுள் நியூஸ் சேவைக்கு கட்டுப்பாடு:
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் பற்றிய “தவறான” தகவல்களை வழங்குவதாக குற்றம் சாட்டி, கூகுள் நியூஸ் சேவையை ரஷ்யாவின் ஊடக கட்டுப்பாட்டாளர் கட்டுப்படுத்தியுள்ளார் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. ரஷ்ய பொது வழக்கறிஞர் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்நாட்டின் ஊடக கட்டுப்பாட்டாளர் ரோஸ்கோம் நாட்ஸர் அறிக்கையின்படி மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆன்லைன் செய்தி சேவை:
ஆன்லைன் செய்தி சேவையானது “உக்ரைனில் இராணுவ நடவடிக்கையின் போக்கைப் பற்றிய தவறான தகவல்களைக் கொண்ட ஏராளமான வெளியீடுகள் மற்றும் பொருட்களை அணுகுவதற்கு அணுகலை வழங்கியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இணையதளத்தை அணுகுவதில் சிக்கல்:
அதன்படி, ரஷ்யாவில் கூகுள் நியூஸ் செயலி மற்றும் இணையதளத்தை அணுகுவதில் சிலருக்கு சிரமம் இருப்பதாக கூகுள் உறுதி செய்துள்ளது. மேலும் இது எங்களின் தரப்பில் எந்த தொழில்நுட்ப சிக்கல்களும் ஏற்படவில்லை என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ரஷ்யாவில் உள்ள மக்களுக்கு செய்திகள் போன்ற தகவல் சேவைகளை முடிந்தவரை அணுகுவதற்கு நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம் என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
மாஸ்கோ நீதிமன்றம்:
பிபிசி உட்பட பல ரஷ்ய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தங்கள் ஆன்லைன் சேவைகளை கட்டுப்படுத்தியுள்ளன. அமெரிக்க சமூக வலைத்தளங்களான Facebook மற்றும் Instagram ஆகியவை மாஸ்கோ நீதிமன்றத்தால் “extremist” என அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் அமெரிக்க நிறுவனமான கூகுள் மற்றும் அதன் வீடியோ சேவையான யூடியூப் மீது “பயங்கரவாத” நடவடிக்கைகள் இருப்பதாக ரோஸ்கோம்நாட்ஸர் குற்றம் சாட்டினார்.
கிரிமினல் குற்றங்கள் அறிமுகம்:
அதே நேரத்தில், ரஷ்ய அதிகாரிகள் மார்ச் மாத தொடக்கத்தில் இரண்டு புதிய கிரிமினல் குற்றங்களை அறிமுகப்படுத்தினர். ஒன்று ரஷ்ய இராணுவத்தை “இழிவுபடுத்தும்” தகவல்களை பரப்புவதற்கும் மற்றொன்று ரஷ்ய துருப்புக்கள் பற்றிய “தவறான” தகவல்களை பரப்புவதாகும். இந்த குற்றத்திற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…