கீவ் நகரில் உள்ள உலகின் 2-வது உயரமான டிவி கோபுரம் மீது ரஷ்யா தாக்குதல்…!
ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இதனைத் தொடர்ந்து, தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
சற்று நேரத்திற்கு முன் கீவ் நகரில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தின் அருகில் உள்ள மக்களை வெளியிருமாறு எச்சரித்த நிலையில், தற்போது, ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.