உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா தெரிவித்திருந்தார்.
மேலும்,ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும்,அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் அணு உலை விபத்தை விட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்தார்.
இதனிடையே,உக்ரைன் லிவிவ் நகரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில்,போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்க, மத்திய அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி,உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு,பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்க 130 பேருந்துகள் தயாராக உள்ளன என்றும்,மேலும், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்கு அழைத்து வரப்படும் மாணவர்கள் விமானங்கள் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்,ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…