ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்! விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ….

Default Image

சரதோவ் நிறுவனத்திற்கு சொந்தமான AN-148 ரக விமானம்  71 பேருடன் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்தனர்.ரஷ்யாவில்  மாஸ்கோவிலுள்ள டோமொதேடோவ  (Domodedovo) விமான நிலையத்திலிருந்து சரதோவ் நிறுவனத்திற்கு சொந்தமான AN-148 ரக விமானம் பயணிகள், சிப்பந்திகள் உட்பட 71 பேருடன் நேற்று புறப்பட்டது. ஓர்ஸ்க் (Orsk) எனுமிடத்திற்கு செல்ல வேண்டிய விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.

Image result for russia  AN-148 flight accident

தரையிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 300 அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி அவசரமாக மாஸ்கோவிலேயே தரையிறக்க அனுமதி கோரினார். ஆனால் அதற்குள்ளாக கண்ணிமைக்கும் நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

Image result for russia  AN-148 flight accident

இந்த விபத்தில் 65 பயணிகளும், 6 ஊழியர்களும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், விபத்து குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்