ரஷ்யா அதிரடி !பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!
ரஷ்யா பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் 23பேரை ஒரு வாரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டனில் ரஷ்யாவின் முன்னாள் உளவாளியும் அவர் மகளும் நஞ்சூட்டப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்ய உளவுத்துறையே இத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டிய பிரிட்டன் லண்டனில் உள்ள ரஷ்யத் தூதரக அதிகாரிகள் 23பேரை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது.
இதற்குப் பதிலடியாக ரஷ்யாவும் மாஸ்கோவில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகள் 23பேரை ஒரு வாரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் தூதர் லாரி பிரிஸ்டோவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.