ரஷ்யா அணி உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் வெற்றி!
ரஷ்யா மற்றும் செனகல் அணிகள் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா மற்றும் எகிப்து அணிகள் நேற்று இரவு மோதின. முதல்பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை.இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியபின் 47, 59, மற்றும் 62 ஆகிய நிமிடங்களில் ரஷ்ய வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்து எகிப்து அணியை திணறடித்தனர்.
73ஆவது நிமிடத்தில் எகிப்து வீரரான மொஹமது சலாஹ் பதிலுக்கு ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர் ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடாததால் 3-1 என்ற கணக்கில் ரஷ்ய அணி வெற்றி பெற்றது.
முன்னதாக, மாஸ்கோவில் நடைபெற்ற ஆட்டத்தில் எச்-பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் மற்றும் போலந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் செனகல் அணி ஒரு கோல் அடித்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் 2-1 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.