பறவை முனியம்மாள் இறந்து விட்டதாக கூறும் செய்தி வதந்தி..!

Default Image

பிரபல நாட்டுப்புற பாடகியான பறவை முனியம்மா, மரணம் அடைந்ததாக சமீபத்தில் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் பொய் என அவரின் மகன் ஒரு விடியோவை வெளியிட்டார்.
தமிழ் சினிமாவின் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள தூள் என்ற படம்மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானவர், பறவை முனியம்மா. அதுமட்டுமின்றி, இவர் பல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், இவருக்கு சமீப காலமாக சிறுநீரக தொடர்பான பிரச்சினைகள் காரணமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Image result for paravai muniyamma
இந்நிலையில், பறவை முனியம்மாள் உயிரிழந்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் அது பொய் என பறவை முனியம்மாவும் அவரின் மகனும் ஒரு வீடியோவை பதிவிட்டனர். அதில் அவர் நலமாக உள்ளதாக கூறினார்.
மேலும் வேலம்மாள் மருத்துவமனை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், பறவை முனியம்மாள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் அதற்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவுள்ளது என அந்த அறிக்கை மூலம் மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்