சக்திமான் தொடர் முகேஷ் கண்ணா உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்தி – விளக்கமளித்த முகேஷ் கண்ணா!

பிரபலமான சக்திமான் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தான் ஆரோக்கியமுடன் உயிருடன் இருப்பதாக முகேஷ் கண்ணா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் என நாளுக்கு நாள் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், 90’ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவாக விளங்கிய சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் முகேஷ் கண்ணா. இவர் சக்திமான், மகாபாரதம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.
தற்பொழுது முகேஷ் கண்ணாவுக்கு தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து நடிகர் முகேஷ் கண்ணா விளக்கமளித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது, ரசிகர்களின் ஆசீர்வாதத்தால் நல்ல உடல் நலத்துடன் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் எனவும், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் முகேஷ் கண்ணா. மேலும், இது போன்ற வதந்திகள் பரப்பும் நபர்களை பிடித்து அடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025