நான் நேற்றைய தினம் மும்பையில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றுபூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பூனம் பாண்டே, ஒரு மாடலான இவர் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வழக்கமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பூனம் பாண்டே தனது காதலனுடன் BMW காரிலில் வெளியில் சென்று, ஊரடங்கு நேரத்தில் அரசு ஆணைகளை மதிக்காமல் வெளியே சுற்றியதற்காகவும், நோய் தொற்று பரப்ப காரணமாக இருந்ததற்காகவும் மும்பையில் உள்ள மரைன் டைரவ் காவல் துறையினர் பூனம் பாண்டேவை கைது செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியதை ஏற்கனவே பார்த்தோம் . அது மட்டுமின்றி, அவரது காரையும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இது குறித்து பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் நேற்றைய தினம் மும்பையில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், நான் நேற்று மட்டுமே மராத்தான் உட்பட 3 படங்களை வீட்டில் இருந்து பார்த்ததாகவும், அவை அனைத்தும் மிக நன்றாக இருந்தது என்றும், என்னை யாரும் கைது செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறியது முற்றிலும் பொய் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…