உஷார்! மகளிர் தினத்தையொட்டி adidas பெயரில் வாட்ஸப்பில் பரவி வரும் புதிய வதந்தி
மகளிர் தினமான மார்ச் 8 இன்று adidas காலணிகளை இலவசமாக தருவதாகக் கூறி வாட்ஸ்அப்பில் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது.
காலனிகளுக்கென்று புகழ்பெற்ற நிறுவங்களில் ஒன்றான adidas இலவச காலணிகளை தருகிறது என்று கூறி வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி பரவுகிறது.அதில் ‘V-app.buzz/adidass’ என்ற URL இல், ‘adidas’ என்பதற்கு பதிலாக ‘adidass’ என்று தவறாக உள்ளது. மேலும் adidas இன் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இந்த URL இல்லை.இந்த லிங்கை கிளிக் செய்தபின்னர் பக்கத்தில் adidas க்குப் பதிலாக வாட்ஸ்அப்பின் லோகோ உள்ளது என்பதால் இந்த செய்தி தனிநபரின் தகவல் திருடும் சிலரால் பரப்பப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மக்கள் யாரும் இதைப் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் முதலில் கிளிக் செய்யக்கூடாது, மேலும் “இலவசமாக” ஏதாவது வழங்குவதாகக் கூறும் எந்த செய்தியும் அல்லது இணைப்பும் எல்லா விலையிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
.பாதுகாப்பாக இருக்க, இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகளைத் தவிர்ப்பது முக்கியம், மேலும் அதை மற்ற தொடர்புகளுக்கு அனுப்புவதையும் தவிர்க்கவும். இதுபோன்ற தந்திரங்களுக்கும் மோசடிகளுக்கும் இரையாகக்கூடிய பயனர்களை ஏமாற்ற ஹேக்கர்களுக்கு இது ஒரு சுலபமான வழியாகும்.