துருக்கியில் 1999இல் 7.4 ரிக்டர் அளவிலும், அதற்கு முன்னதாக 1939ஆம் ஆண்டு 7.8ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் துருக்கியை தாக்கியுள்ளது.
நேற்று உலகையே அதிர வைத்த பேரிடர் சம்பவம் தான் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம். இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து அவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிரியா எல்லையான தென்கிழக்கேயும், துருக்கியின் ஒரு பகுதியான காஸியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்திலும் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க அளவானது, ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவாகியது. 7;5 அளவுகளின் அதே இடத்தில் இரண்டாவது முறையாக பிற்பகலில் ஏற்பாட்டது. அதனை தொடர்ந்து, நேற்று இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் 6.0 ரிக்டர் எனும் அளவுகளில் மூன்றாவது முறையாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
நேற்று மாலை 4.00 நிலவரப்படி, துருக்கியில் 900க்கும் அதிகமானோர் இறந்ததாகவும், சிரியாவில் 500க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், மொத்தமாக 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில், துருக்கி முக்கிய வரலாற்று சின்னமான 2200 ஆண்டுகள் பழமையான காஸியான்டெப்கோட்டை முற்றிலும் சிதைந்தது. அதே போல, துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை நிறுவனமும், ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் சார்பில் மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்து மீட்பு பணிகளை முடிக்கிவிட்டுள்ளன.
அதே போல அண்டை நாடுகளான, நெதர்லாந்து, ருமேனியாவிலிருந்தும் மீட்புப்படையினர் உதவி செய்ய முன் வந்துள்ளனர். நமது பிரதமர் மோடி நேற்று பெங்களூரு விழாவில் பேசுகையில் கூட, துருக்கி நிலநடுக்கத்திற்கு இரங்கல் தெரிவித்து விட்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
துருக்கி நிலநடுக்க பாதிக்கபடும் பகுதியாக அறியப்பட்டு வருகிறது. அங்கு இதே போல, 1999இல் டஸ்ஸில் எனும் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 17,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு முன்னதாக 1939ஆம் ஆண்டு 7.8ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கியை சிதைத்துள்ளளது. அப்போது கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் 33,000 பேர் உயிரிழந்த்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்து.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…