ருத்ரதாண்டவம் படத்தின் இரண்டாவது அறிவிப்பு…!
ருத்ரதாண்டவம் படத்திற்கான இரண்டாவது அறிவிப்பு மாலை 5 மணிக்கு வரும் என்று இயக்குனர் மோகன் ஜி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் மோகன் ஜி ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கிறார்.
இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் தற்போது இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் பர்ஸ்ட் லூக் போஸ்டரை வெளியீட்டதை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது அறிவிப்பு மாலை 5 மணிக்கு வரும் என்று இயக்குனர் மோகன் ஜி ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
#ருத்ரதாண்டவம் படத்தின் இரண்டாவது அறிவிப்பு மாலை 5 மணிக்கு வரும்.. pic.twitter.com/1g9nObrMXD
— Mohan G Kshatriyan ???? (@mohandreamer) February 14, 2021